நானுஓயா விபத்திற்கான அதிர்ச்சிக் காரணம்!

Date:

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் ஹைஏஸ் வாகனமும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் ஹைஏஸ் வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .

இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்களை அதிகளவு மேம்பாலங்கள் கொண்ட அந்த வீதியில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் லொறி சாரதி லொறியை ஓட்டிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லொறியின் பிரேக் திடீரென செயலிழந்து நுவரெலியா நோக்கி சென்ற வாகனம் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நட்சத்திர விடுதியில் காஸ்யப்ப தேரரும், வீரசேகரவும்!

விஹாரமஹாதேவி பூங்காவில் சத்யாகிரகம் நடத்திய பாலங்கொட கஸ்ஸப தேரர், நேற்று முன்தினம்...

லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் விலையை அதிகரித்தது!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன்...

மாத்தறையில் மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருளின் பின்னணி!

மாத்தறை, தலல்ல, நா-ஒதுன்ன கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 11.8 பில்லியன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்