காதலியை கடலில் தள்ளிவிட்டு கொலை செய்த சந்தேகநபர் நேற்று (30) கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். பஹல்கொட, பயாகல பிரதேசத்தில் வசித்து வந்த தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷி செவ்வினி என்ற 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (29) பயாகல தியலகொட பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் தம்பதியினர் பேசிக் கொண்டிருந்தனர். இருவருக்குமிடையிலான உரையாடல் முரண்பாடாகியதையடுத்து காதலன் காதலியை கடலில் தள்ளிவிட்டுள்ளார். கடற்கரையிலிருந்த கருங்கல் பாறையில், யுவதியின் தலை மோதியதாக சந்தேகநபரின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது காதலி 1990 நோயாளர் காவு வண்டியில் அழைத்து வரப்பட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளதாகவும் சந்தேக நபர் தனது நண்பருக்கு அறிவித்துள்ளார்.
18 வயதுடைய சந்தேகநபர், மகொன, பயாகல பிரதேசத்தை சேர்ந்தவர்.