25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

லிட்ரோ எரிவாயு குறித்து அமைச்சரவை வழங்கிய அனுமதி!

லிட்ரோ காஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை M/s OQ Trading Limited இற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே-

2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கல்

லிட்ரோ காஸ் லங்கா லிமிடட்டிற்கு 2025ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரல் முறையைக் கடைப்பிடித்து ஒருகட்ட இரட்டை கடிதவுறை முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக M/s OQ Trading Limited மற்றும் M/s Siam Gas Trading Pte Limited ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாத்திரம் விலைமுறியினை சமர்ப்பித்துள்ளது. தொழில்நுட்ப மதிப்பீட்டின் போது M/s Siam Gas Trading Pte Limited இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமுறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக்குழுவின் விதந்துரைகளுக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளித்துள்ள விலைமனுதாரரான M/s OQ Trading Limited இற்கு 2025 ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment