ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவை, ஈ.பி.டி.பி. கட்சியின் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர், நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டவர் டக்ளஸ். ரணில் வெற்றியடையாவிட்டால் நாடு இருண்ட யுகத்துக்கு செல்லும், எரிவாயு வரிசையேற்படும் என மக்களை அச்சுறுத்தும் பொய்ப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
எனினும், அதனை மக்கள் கணக்கெடுக்காமல் அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தனர்.
நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைய காரணமான கோட்டாவின் ஆட்சியிலும் டக்ளஸ் அமைச்சு பதவி வகித்திருந்தார். கடந்த ஆட்சியில் பெரும் ஊழல் மோசடி நடந்துள்ளதாகவும், பொதுமக்கள் பணத்தை ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் துஸ்பிரயோகம் செய்ததாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனுர அரசாங்கம் நடவடிக்கையெடுக்குமென கருதப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டக்ளஸ் குழுவினர், ஜனாதிபதி அனுரவை சந்தித்து பேச்சு நடத்தி, புகைப்படமும் எடுத்துள்ளனர்.