கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை

Date:

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அந்த அந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் இருவரையும் விடுவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21...

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்