சில காலமாக நிலவி வந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய கடவுச்சீட்டு வழங்கும் பணியை நேற்று (21) முதல் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, புதிய வெளிநாட்டு பாஸ்போர்ட் நீல நிறத்தில் 48 பக்கங்களைக் கொண்டுள்ளது.
புதிய கடவுச்சீட்டின் அனைத்துப் பக்கங்களிலும் இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் அழகிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், புதிய பாஸ்போர்ட்டில் பி எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டில் என் எண் இருந்தது.
எதிர்வரும் காலங்களில் புதிய கடவுச்சீட்டு வழங்கல் வழமைக்கு திரும்பும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.




