‘அனுரவும் பல்கலைக்கழகத்திலிருந்து வந்தவர்; நாமும் பல்கலைக்கழகத்திலிருந்து வந்தவர்களே’: யாழ் சுயேச்சைக்குழு

Date:

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் பல்கலைக்கழகத்திலிருந்தே வந்தவர். நாமும் பல்கலைக்கழகத்திலிருந்தே வந்துள்ளோம் என யாழில் புற்றீசல்கள் போல களமிறங்கியுள்ள ஏராளம் சுயேச்சைக்குழுக்களில் ஒன்றின் தலைவர் கிருஷ்ணராசா கிருஷ்ணமீனன் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் சிலர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள். இந்த சுயேச்சை குழுவினரின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது சுயேச்சை குழுவில் போட்டியிடும் கிருஷ்ணராசா கிருஷ்ணமீனன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய பழைய, முன்னாள் தலைவர்கள் சோரம் போய்விட்டார்கள் என்பதை
காரணமாக வைத்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை என்பது தீர்மானிப்பதை ஏற்க முடியாது.அது முற்றிலும் அபத்தமானது.

இளைஞர்கள் தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ளோம். இந்த கருத்தைச் சொன்ன கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் பல்கலைக்கழக பின்னணியில் இருந்து வந்தவர். நாங்களும் பல்கலைகழக பின்னணியில் இருந்து வந்திருக்கின்றோம். மக்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் மக்களுக்கு ஊடாகவே எடுத்துச் செல்வோம். மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களை தீர்மானிப்பார்கள் என ரில்வின் சில்வாவுக்கும் சர்வதேச தரப்புகளுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

எமது மக்களின் மன நோகும் வகையிலும் எமது மக்கள் இதற்காக செய்த போராட்டங்களையும் தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் விதத்திலும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என ரில்வின் சில்வா உள்ளிட்ட தென்னிலங்கைத் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். – என்றார்.

spot_imgspot_img

More like this
Related

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...

கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாளரான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்