மன்னாரிலிருந்து போதை மாத்திரைகளை கொண்டு சென்றவர் கைது!

Date:

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மன்னாரை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபரிடமிருந்து 5,99,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி சுமார் 6 கோடி எனவும் தெரியவருகிறது.

சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் இதன்போது அதிரடிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, மன்னார் பகுதியில் வசித்து வரும் சுஜி என்ற நபர் படகொன்றில் வந்து சிலாவத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து போதை மாத்திரைகளை வழங்கியதாக தெரிவித்தார்.

பின்னர், அவரது அறிவுறுத்தலின் பேரில் போதை மாத்திரைகள் கொழும்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்