ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்

Date:

திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றேன்..ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும். அதுமாத்திரமன்றி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வருகின்றேன். கடந்த காலங்களில் தேசியத்துடன் நாங்கள் சென்றவர்கள். தற்போதுள்ள காலகட்டத்தில் எமக்கு தேசியத்துடன் உடன்பாடு இல்லை. காரணம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற நிலைதான் தொடர்ந்து வருகின்றது.

தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுப்பது தான் எமது முதல் நோக்கமாகும். இதை விட்டுவிட்டு வெறுமனே தேசியத்தை பேசிவிட்டு காலத்தை கடத்துவது ஒரு உசிதமான விடயமல்ல. எமது மாவட்டத்திற்கு கடந்த கால தேர்தல்களில் பல கட்சியினர் வருகின்றார்கள். போகின்றார்கள். வாக்கு கேட்கின்றார்கள். அத்துடன் அவர்களின் விடயங்கள் முடிந்து போகும். ஆனால் இங்கு நாங்கள் மாத்திரமே மக்களுக்காக உண்மையாக செயற்பட்டு வருகிறோம். இம்முறை தேசியத்தை விட்டு ஈபிடிபி கட்சியினை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் கடந்த 30 ஆண்டு காலமாக தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எம்.பியாக வெற்றி பெற்று பல்வேறு அமைச்சுகளை பெற்று மக்கள் சேவை செய்து வருகின்றார்.

அவருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் எம்மக்கள் நன்மை பெறுவார்கள். சிலர் அவரை நோக்கி இங்கு என்ன அபிவிருத்திகளை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர். அது பொருத்தமான கேள்வி அல்ல என்றே கூறுவேன். வடகிழக்கில் அவர் தனது சேவை காலத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார். ஆனால் அவரிடம் இங்குள்ளவர்கள் அணுகி எதுவும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. மக்களோ அல்லது சங்கங்களோ அவருடன் சந்தித்து கதைத்து அவரிடம் பெறுவோம் என்றும் நினைத்ததில்லை. ஆனால் மக்களின் அபிலாஷைகளை எம்போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும்.

இதற்கு மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் தான் இன்று தேர்தலில் இறங்கியுள்ளோம். மக்கள் இவ்விடயங்களை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். எனவே 74 வருடங்களாக விடுதலை உரிமைகளை பேசிக்கொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையிடுவதை விட்டுவிட்டு நாங்கள் அபிவிருத்தி பாதையை நோக்கி செல்ல வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூட்டங்களை நடாத்திக்கொண்டு தற்போது மக்களை குழப்ப முற்படுகின்ற சம்பவமும் இடம்பெற்று வருகின்றது. இந்த பொதுக்கட்டமைப்பு தேர்தல் காலத்தில் முளைத்த ஒரு அமைப்பு தான். மக்களுக்கு கிடைக்க வேண்டியதையும் இல்லாமல் செய்ய முற்படுகின்றார்கள். அவர்கள் உள்நோக்கம் கொண்ட அமைப்பு. தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இத்தேர்தல் காலங்களில் அவர்கள் செயற்படுகின்றார்கள். மக்கள் விழிப்படைய வேண்டும். உங்கள் வாக்ககள் பெறுமதி மிக்கது.பெறுமதி மிக்க தலைவர்களுக்கு வாக்களிக்க முற்பட மக்கள் முன்வர வேண்டும் என்றார்.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது 06ஆம் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

அரசாங்கத்தின் "Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு நோய்...

தாலிபான் அரசின் புதிய கட்டுப்பாடு! அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்