இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவியை துறந்தார் மாவை சேனாதிராசா!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதாக, மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.

கட்சியின் பதில் பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழு நியமிக்கப்பட்டதும், மாவை சேனாதிராசாவுக்கு தெரியாமல் நடந்துள்ளது. கட்சிக்குள் தலைவரை ஓரம் கட்டி, சுமந்திரன் அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளதையடுத்து, அவர் தனது கட்சித் தலைவர் பதவியை துறந்துள்ளார்.

அண்மையில் நடந்த தலைவர் தெரிவில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சி.சிறிதரன் அல்லது மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவர் கட்சியின் தலைமையை வகிக்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்