ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று (06) கடுவாப்பிட்டி, மிகோமுவ புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்டுப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்குச் சென்ற ஜனாதிபதி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் என ஜனாதிபதியிடம் நேரடியாக தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களும் கலந்துகொண்டார்.