நண்பனின் காதலியை சந்திக்க சென்ற மாணவன் தாக்குதலால் உயிரிழப்பு

Date:

நண்பனின் காதலியை சந்திப்பதற்காக சென்ற பாடசாலை மாணவன், கும்பலொன்றினால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மாத்தளை மஹாவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மடவளை, உல்பத்த, நாளந்த தோட்டத்தை சேர்ந்த கவுடுபெலெல்ல கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 17 வயதுடைய மோகன் யுகேஷ் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் , நண்பனின் காதலியான பாடசாலை மாணவியை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை (01) மாலை 5.30 மணியளவில், மடவல உல்பத்த ஆத்திஸ்மலை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது கொடவெல புத்தர் சிலை அருகில் வைத்து இனந்தெரியாத கும்பலால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் .

இதன்போது ஏனைய இருவர் தப்பியோடியுள்ளதுடன் குறித்த மாணவன் தாக்குதலுக்குள்ளாகி தரையில் விழுந்து கிடந்த நிலையில் அப் பகுதி மக்களால் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது .

பாடசாலை மாணவியின் காதலனும் மற்றைய மாணவனும் தாக்குதலில் இருந்து தப்பி ஓடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் , மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்