ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளுங்கள்: பிரதான தமிழ் கட்சிகளுக்கு இந்தியா அறிவுரை!

Date:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒரணியாக போட்டியிடுமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இந்திய தரப்பு அறிவுரை கூறியுள்ளது.

நேற்று (30) கொழும்பில் இந்திய தூதரை சந்தித்த மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், பா.சத்தியலிங்கம் மற்றும் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு இந்த அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பிரதான தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை இழக்கும் அபாயமுள்ளதாக இந்திய தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமக்குள் பிரச்சினைகள் இருப்பதாகவும், மீண்டும் ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும், போதிய காலஅவகாசம் இல்லாமலிருப்பதாக கட்சிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் இருப்பது தனக்கு தெரியுமென்றும், அதையும் மீறி ஒற்றுமையாக தேர்தலை சந்தித்து, ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதே புத்திசாலித்தனம், அவ்வாறு நடந்தால் மாத்திரமே தமிழ் அரசியலை தக்க வைத்திருப்பீர்கள், சர்வதேச நாடுகளுடன் ஊடாட முடியும் என இந்திய தூதர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமக்குள் பேச்சு நடத்தி, முடிவொன்றை தெரிவிப்பதாக தமிழ் கடசிகள் குறிப்பிட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்