பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலில் எந்த காயமும் இல்லாமல் இருப்பதாக மருத்துவ ஆதாரமும் பாதுகாப்பு ஆதாரமும் ஞாயிற்றுக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
நஸ்ரல்லாவின் மரணத்தை சனிக்கிழமை உறுதிப்படுத்திய ஹிஸ்புல்லாவின் அறிக்கை அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் அல்லது அவரது இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்று கூறவில்லை. இரண்டு ஆதாரங்களும் அவரது உடலில் நேரடி காயங்கள் இல்லை என்றும், குண்டுவெடிப்பின் சக்தியால் ஏற்பட்ட அப்பட்டமான அதிர்ச்சிதான் மரணத்திற்கு காரணம் என்றும் கூறியது.
🚨SEGELAS INFO:
Sekilas bgm Tentara Langit Israel mengirim Malaikat Pencabut Nyawa SekJen Hisbullah Hassan Nasrallah dkk menggunakan Bom BerJenis BUNKER BUSTER
Dari Namanya Saja udh Pasti Bisa Tembus dan Hancurkan Bunker
Bgm Islam Iran gak Mikir 2X Mau coba Serang Israel lgsg? pic.twitter.com/3rO0dWzHRa— Benyamin🇮🇱🇮🇩Kogoya (@Bibikogoya) September 29, 2024
முன்னதாக நஸ்ரல்லா பயன்படுத்திய சில ஆபரணங்கள், குண்டுத்தாக்குதல் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
லெபனானில் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்டம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுள்ளது.