பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு என குறிப்பிட்டபடி கூடிய சில பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே பெண்கள் குழு இவ்வாறு தெரிவித்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை தீவிரமாக ஆதரித்த சசிகலா ரவிராஜூம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.




