இரத்தக்கறை படிந்த கைகளுடையவர்களுடன் கூட்டணி கிடையாது: யாழில் திடீரென ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரபரப்பு முடிவு!

Date:

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என குறிப்பிட்டு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரத்தம் தோய்ந்த கைகளையுடைய தரப்புக்களுடன் கூட்டாக தேர்தலை சந்திக்க மாட்டோம் என, திடீர் ஞானோதயம் பெற்ற- வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெற்று, சிவில் சமூகமென இயங்கும் நபர்கள் எடுத்த முடிவே குழப்பத்துக்கு காரணம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்புக்களின் பின்னணி பற்றி,ஏற்கெனவே தமிழ் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தோம். வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெறுவதை நோக்கமாக கொண்டு, சிவில் சமூகமென இயங்கும் ஆசாமிகளும்- அந்தவகையில் பணம் பெற்றுக்கொண்டு பத்திரிகைகளில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த கட்டுரையாளர்கள், தாமும் அன்ரன் பாலசிங்கங்களாக மாற வேண்டுமென்ற ஆசையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கச்சாப்பொருளே தமிழ் பொதுவேட்பாளர் என வெளிப்படுத்தியிருந்தோம்.

பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்ட போது, முன்னாள் ஆயுதப்போராட்ட இயங்கங்களான விடுதலைப் புலிகள், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட தரப்புக்கள் அதனை ஆதரித்தன.

அப்போதே, இயக்கங்களை உள்ளீர்ப்பதில் புலம்பெயர்ந்த- தூயதமிழ் தேசியவாதிகளுக்கு விருப்பமிருக்கவில்லை. என்றாலும், வேறு கட்சிகள் ஆதரவளிக்காத நிலையில், தனித்து நின்றால் தமது குடும்ப உறுப்பினர்களே வாக்களிக்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த யாழ்ப்பாண கட்டுரையாளர்கள், வேறு வழியின்றி இயக்கங்களுடன் கூட்டணி வைத்தனர். பு.பெயர்ந்தவர்களும் வெட்கத்தை வெளிக்காட்டாமல், காசை அனுப்பிக் கொண்டிருந்தனர். இல்லாவிட்டால், அவர்கள் நிறுத்திய பொதுவேட்பாளர் படுத்து விடுவாரே!

ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையுடன், யாழ்ப்பாண என்.ஜி.ஓ மாபியாக்களான- தமிழ் சிவில் சமூகமென குறிப்பிடுபவர்கள்- தமது தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க விரும்பினர். இதையொட்டி பல சுவாரஸ்ய குழிபறிப்புக்கள், டீல்கள் நடந்தன. அவற்றை அடுத்த வாரம் குறிப்பிடுகிறோம்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தவர்கள்- விடுதலைப் புலிகளின் போராளிகள் ஆரம்பித்த ஜனநாயக போராளிகள் அமைப்பும்- ஆயுத இயக்கங்கள். அவர்களின் கைகளில் இரத்தம் உள்ளது, அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என, சிவில் அமைப்பு என கூறுவோரின் உள்ளக கலந்துரையாடலில் பலரும் அபிப்பிராயப்பட்டனர்.

இரத்தம் தோய்ந்த கைகளுடையவர்கள் என குறிப்பிடும் திடீர் ஞானோதயக்காரர்களில் பின்னணியும் சுவாரஸ்யமானது. வவுனியாவை சேர்ந்த ஒருவர்தான் தமிழ் சிவில் சமூகத்தை கூலிக்குமாரடிக்கும் கூட்டம் (தூதரகங்களில் பணம் பெற்று இயங்குபவர்கள்) ஆக்கியதில் முதன்மையானவர். அண்மையில் இந்தக்கூட்டம் தென்னாபிரிக்காவுக்கும் சென்று வந்தது. இந்த நபர் முன்னாள் ஈரோஸ் ஆயுத இயக்கத்தின் உறுப்பினர். எம்பஸி பணத்தில் திடீரென ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்.

கட்டுரையாளர்கள் நிலாந்தன் முன்னாள் விடுதலைப் புலிகளின் அமைப்பின் உறுப்பினர். யோதிலிங்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர். கணேசலிங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகங்களில் பணியாற்றியவர். இவர்கள்தான் திடீர் ஞானஸ்நானக்காரர்கள்.

இவர்கள் இப்படி திடீரென ஞானஸ்நானம் பெற்றதும் ஒரு கள்ள நோக்கத்துடன்தான். அதை அடுத்த வாரமே வெளிப்படுத்தும் சூழல் அமையும்.

இன்று சனிக்கிழமை தாம் கூடி, தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவை எடுத்து, ஞாயிறு அளவில் தெரிவிப்பதாக இந்த ஞானஸ்நானக்குழு, அரசியல் கட்சிகளிடம் கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியாக தேர்தலை சந்தித்தவர்கள், ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்குள் மற்றொரு தேர்தலுக்கு கூட்டணியாக தேர்தலை சந்திக்க முடியாமல் காரணம் கூறுவதை வேடிக்கையென்பதா, சோதனையென்பதா?

spot_imgspot_img

More like this
Related

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்