திங்களன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல், தெற்கு லெபனானுக்கான ஹெஸ்பொல்லா தளபதியைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக ஹெஸ்பொல்லாவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.
சமீபத்திய வாரங்களில் ஹெஸ்பொல்லாவின் தெற்கு பெய்ரூட் கோட்டையில் ஹெஸ்பொல்லாவின் உயர்மட்ட அதிகாரிகளை குறிவைத்த மூன்றாவது இஸ்ரேலிய தாக்குதல் இது. வெள்ளிக்கிழமை ஒரு தாக்குதலில் குழுவின் உயரடுக்கு ரட்வான் படைக்கு தலைமை தாங்கிய இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார், ஜூலை தாக்குதலில் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டார்.
“இஸ்ரேலிய தாக்குதலின் இலக்கு அலி கராக்கி, தெற்கு முன்னணியின் தற்போதைய தளபதி அவரே“ என ஹெஸ்பொல்லா ஆதாரங்களை மேற்கோளிட்டு செய்திகள் வெளியாகின. ஆகில் மற்றும் ஷுக்ர் கொல்லப்பட்ட பின்னர், தளபதியானவர் கராக்கி.
காராக்கி கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலிருந்து ஹெஸ்பொல்லாவின் அல்-மனார் தொலைக்காட்சி சேனல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அதே நேரத்தில் AFP செய்தியாளர் அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறினார்.
ஒரு கட்டிடத்தின் நிலத்தடி தங்குமிடத்திற்குள் ஏவுகணை ஒன்று வெடித்ததாக அல்-மனார் கூறிaது. தாக்குதல் நடந்தபோது பெரிய வெடிப்பு எதுவும் கேட்கவில்லை என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.