வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அனுரகுமார பதவியேற்றதை தொடர்ந்து, முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் பதவிவிலகி வருகிறார்கள். அந்த வரிசையில் சார்ள்ஸூம் தனது பதவிவிலகலை அறிவித்துள்ளார்.
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் முன்னதாக தேர்தல் ஆணைக்குழுவில் பதவிவிகித்தார். கடந்த உள்ளூராட்சிசமன்ற தேர்தலை குழப்ப ரணில் அரசு மேற்கொண்ட சூழ்ச்சியில் பங்கேற்றதால், பிரதியுபகாரமாக வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார் என்ற விமர்சனம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1