27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

நீர்வேலியில் வீடு எரிந்து பெண் பலி

யாழ்ப்பாணம் நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய குறித்த பெண்ணின் வீடு தீக்கிரையாகியுள்ளது. இதனால் வீட்டிலிருந்த குறித்த பெண்ணும் எரிந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது.
அத்துடன் வீட்டின் வாசலிலே சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய் தூள் வீசப்பட்டுள்ளது.

குறித்த சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புபடையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என்றும் அல்லது காஸ் சிலிண்டர்கள் வெடித்து வீடு எரிந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

லசந்தக்கு நீதி வேண்டும் – சஜித்

east tamil

Leave a Comment