பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக யாழ் பல்கலையின் பெயரில் வெளியானது போலி அறிக்கை: கைவரிசை காட்டியது யார்?

Date:

சில கட்சிகள், அமைப்புக்களால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனிற்கு ஆதரவளிப்பதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

சில நாட்களின் முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் விதமாக, யாழ்ப்பாண பல்கலைகழக்க சமூகம் என அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறானதொரு அறிக்கை பற்றி செய்திகளின் மூலமே அறிந்து கொள்ள முடிந்தது என்றனர்.

தமது சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பிரதான வேட்பாளர்களிற்கு ஆதரவளிப்பதுடன், சிலர் பகிஸ்கரிப்பு கோரிக்கைக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.

அண்மையில், ஜேவிபிக்கு ஆதரவளித்து புலமையாளர்கள் கையெழுத்திட்டு வெளியான அறிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 விரிவுரையாளர்களும் கையெழுத்திட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர்களில் பெரும்பாலானவர்களும் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை.

இந்த போலி அறிக்கையை, தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பீட தலைவர் ஒருவரும், பேராசிரியர் ஒருவரும் தயாரித்து வெளியிட்டிருக்கலாமென பல்கலைக்கழக வட்டாரங்களில் சந்தேகம் நிலவுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...

யாழில் மகளை சீரழித்த தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டனை

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்