குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தலையில் கோடரியால் தாக்கி கொலை செய்ததுடன், மனைவியின் மூத்த சகோதரியையும் கோடரியால் தலையில் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் வாத்துவ பொடுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஹசினி ஹன்சனி ருவன்திலக என்ற ஒரு பிள்ளையின் தாயே கோடரியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவி தனது இரண்டு மாத குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.




