‘காஞ்சனா 4’ நாயகி பூஜா ஹெக்டே?

Date:

‘காஞ்சனா 4’ படத்தில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. ‘காஞ்சனா’ வரிசை படங்களை இயக்கி, தயாரித்து தொடர்ச்சியாக வெற்றியும் பெற்று வருபவர் லாரன்ஸ். தற்போது இதர இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்தாலும், ‘காஞ்சனா 4’ படத்தின் கதையையும் எழுதி வந்தார். இப்போதுள்ள சூழலுக்கு ஏற்றவகையில் பிரம்மாண்ட தயாரிப்பு செலவு வரும் வகையில் எழுதியிருக்கிறார்.

இந்தக் கதையை கேட்டுவிட்டு, பல தயாரிப்பாளர்கள் தயாரிப்பு செலவைக் கேட்டு தயக்கம் காட்டினார்கள். இறுதியாக கோல்டு மைன்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக, சத்யஜோதி நிறுவனம் – கோல்டு மைன்ஸ் நிறுவனம் இணைந்துதான் லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ஹண்டர்’ படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ‘காஞ்சனா’ படங்கள் போலவே, இந்தப் பாகத்தையும் ஜனரஞ்சகமாக எழுதியிருக்கிறார் லாரன்ஸ். இதில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர் தேதிகள் கொடுப்பதை முன்வைத்து இதர நடிகர்கள் ஒப்பந்தத்தை முடித்து படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்திருக்கிறார் லாரன்ஸ்.

தமிழ் படங்கள் பலவற்றை இந்தியில் டப்பிங் செய்து யூடியூப், இந்தி தொலைக்காட்சியில் உள்ளிட்டவற்றில் வெளியிட்டு வரும் நிறுவனம்தான் கோல்டு மைன்ஸ். தற்போது பெரிய முதலீட்டில் தமிழ் படங்களை தொடர்ச்சியாக தயாரிக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்