ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டம் யாழில் நடைபெற்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மதியம் இக் கூட்டம் நடைபெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் உட்பட ஈபிடிபியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
,இன்றைய கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டுவதாகவும், அட்டை பண்ணை உரிமம் பெற்றவர்கள் ஆட்களை திரட்டுவதாகவும் முன்னதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1