திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு வியாழக்கிழமை (12) பணி இடைநீக்க கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு, விளக்கம் கேட்டு அவரை இடைநீக்கம் செய்தது.
மாவட்ட நீதிபதியாக செயற்படுவதற்கு திருகோணமலை பிரதான நீதவான் இ.பயாஸ் ரசாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டை பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீடொன்றில் எம்.கணேசராஜா சென்ற போது, பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டதும், பின்னர் பொலிசார் அவரை மீட்டதாகவும், அந்த பெண் மீது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று நடந்து வருவதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1