சஜித் பேரணி பட்டாசில் 8 பேர் காயம்!

Date:

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் பொலிஸார் 6 பேர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொதுமக்களில் இருவரும் காயமடைந்தனர்.

விபத்து இடம்பெற்ற போது கடமையில் இருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்றுள்ள மேற்படி பேரணி கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்