உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட ஈஸ்டர் நஷ்டஈடாக 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
08 தவணைகளில் தொகையை செலுத்திய அவர், கடந்த ஓகஸ்ட் 30ம் திகதி இறுதிகட்டணத்தை செலுத்தினார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்க உத்தரவிப்பட்ட 100 மில்லியன் ரூபா நட்டஈடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 16ஆம் திகதி இந்தத் தொகையை செலுத்தியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கும் உரிய நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புப் படைத் தலைவரும் போதிய உளவுத்துறையைப் பெற்றிருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




