27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

15 வயது மகன் சார் செலுத்திய சம்பவம்; சட்டத்தரணிக்கும், மகனுக்கும் அபராதம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனது 15 வயது மகனை காரை ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரது மகனுக்கு பாணந்துறை பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷவினால் ரூ. 55,000 அபராதம் விதிக்கப்பட்டது.

புத்தளத்தில் வசிக்கும் 42 வயதுடைய சட்டத்தரணி மற்றும் அவரது மகனுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் நீதவான் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சட்டத்தரணி தனது குடும்ப உறுப்பினர்களுடன் அண்மையில் தங்காலை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அவர் தனது 15 வயது மகனுக்கு மத்தலயில் இருந்து கட்டுநாயக்காவிற்கு காரை செலுத்த அனுமதித்துள்ளார். இந்த சம்பவத்தை மற்றொரு வாகன ஓட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம போக்குவரத்து பொலிஸார், காரின் பதிவு இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது காரின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தனது வயதுக்குட்பட்ட மகனை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக காரின் பதிவு உரிமையாளரான சட்டத்தரணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ரூ. 25,000 அபராதம் நீதவானால் விதிக்கப்பட்டது, மேலும் மகனுக்கு சீட் பெல்ட் அணியாதது மற்றும் வயதுக்கு குறைவான வாகனம் ஓட்டியதற்காக ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமாகாண விவசாயிகள் கௌரவிப்பு

Pagetamil

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Pagetamil

ஐ.ம.ச தேசியப்பட்டியலுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு!

Pagetamil

ஆசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்!

Pagetamil

குடிநீர் வசதி இல்லாமல் பத்தனை கிரக்கிலி தோட்ட பிரதேச மக்கள்

east pagetamil

Leave a Comment