15 வயது மகன் சார் செலுத்திய சம்பவம்; சட்டத்தரணிக்கும், மகனுக்கும் அபராதம்!

Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனது 15 வயது மகனை காரை ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரது மகனுக்கு பாணந்துறை பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷவினால் ரூ. 55,000 அபராதம் விதிக்கப்பட்டது.

புத்தளத்தில் வசிக்கும் 42 வயதுடைய சட்டத்தரணி மற்றும் அவரது மகனுக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் நீதவான் கடுமையாக எச்சரித்துள்ளார்.

சட்டத்தரணி தனது குடும்ப உறுப்பினர்களுடன் அண்மையில் தங்காலை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அவர் தனது 15 வயது மகனுக்கு மத்தலயில் இருந்து கட்டுநாயக்காவிற்கு காரை செலுத்த அனுமதித்துள்ளார். இந்த சம்பவத்தை மற்றொரு வாகன ஓட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம போக்குவரத்து பொலிஸார், காரின் பதிவு இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது காரின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தனது வயதுக்குட்பட்ட மகனை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக காரின் பதிவு உரிமையாளரான சட்டத்தரணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ரூ. 25,000 அபராதம் நீதவானால் விதிக்கப்பட்டது, மேலும் மகனுக்கு சீட் பெல்ட் அணியாதது மற்றும் வயதுக்கு குறைவான வாகனம் ஓட்டியதற்காக ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்