அழகு நிலையத்தில் தைலம் தடவியதை தொடர்ந்து, பெண்ணின் தலைமுடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் சலூன் உரிமையாளரையும் உதவியாளர் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்களின் வகைகளை சரிபார்த்து, அவை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபைக்கும் உத்தரவிடப்பட்டது.
மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண் ஒருவரே தலைமுடியை இழந்துள்ளார். ஒரு விருந்தில் கலந்து கொள்வதற்காக மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு 30ஆம் திகதி சென்று. முடி, அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு அவரது தலைமுடி உதிர ஆரம்பித்துள்ளது.
தொடர்புடைய சம்பவத்திற்குப் பிறகு, அழகு நிலையத்தின் உரிமையாளரும் அவரது இரண்டு பணிப்பெண்களும் சலூனை மூடிவிட்டு ஓடிவிட்டதாகவும், பின்னர் அவர்களது வீடுகளைச் சோதனையிட்டபோது, வீடுகளிலும் யாரும் இருக்கவில்லையென போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.