Pagetamil
இலங்கை

கிளிநொச்சி மாணவியெடுத்த விபரீத முடிவு!

காதல் முறிவு காரணமாக கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்மையில் (31) இடம்பெற்றுள்ளது.

அரவிந்தன் துசானி என்ற 18 வயது மாணவி, இரண்டு வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரது காதலன் வேறு ஒரு மாணவியுடன் ரகசியமாக பழகுவதை கண்டுபிடித்ததையடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தற்கொலை செய்துகொண்டபோது வீட்டில் யாரும் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பில் உடனடியாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளுக்காக சடலத்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment