கிளிநொச்சி மாணவியெடுத்த விபரீத முடிவு!

Date:

காதல் முறிவு காரணமாக கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்மையில் (31) இடம்பெற்றுள்ளது.

அரவிந்தன் துசானி என்ற 18 வயது மாணவி, இரண்டு வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரது காதலன் வேறு ஒரு மாணவியுடன் ரகசியமாக பழகுவதை கண்டுபிடித்ததையடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தற்கொலை செய்துகொண்டபோது வீட்டில் யாரும் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பில் உடனடியாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளுக்காக சடலத்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த...

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்