மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் வியாழக்கிழமை (29) அன்று பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் எவ்வித வழக்கு விசாரனைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.இதன் காரணமாக அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , வெள்ளிக்கிழமை (30) அன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஊடக சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1