Pagetamil
இலங்கை

கச்சதீவில் மீட்கப்பட்ட 2 இந்திய மீனவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்

கச்சதீவிற்கு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வந்தடைந்த இரண்டு இந்திய மீனவர்களும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளால் இன்று (29) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்

படகு கவிழ்ந்ததில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவரின் சடலம் மீடுகப்பட்டு நேற்று இராமேஸ்வரம் துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

கச்சத்தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான 2 மீனவா்களில் ஒருவா் நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்டாா்

ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை (26) விசைப் படகில் 4 மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு அருகே (26) நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது கடுமையான , காற்று வீசியதால் இந்தப் படகு கடலில் கவிழ்ந்தது.

இரு இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு நீந்திச் சென்று கரையேறினா். பின்னா், அவா்கள் இதுகுறித்து இலங்கைக் கடற்படையினரிடம் தெரிவித்தனா்.

ஆனால் அவர்களில் இருவர் கடலில் மாயமாகினர்
கச்சத்தீவுக்கு நீந்திச் சென்ற இரண்டு மீனவா்களையும் கடற்படையினர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இரண்டு மீனவர்களையும் இன்று நண்கல் யாழ் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment