கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!

Date:

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது.

அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பாரஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்ச பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் 7கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரிக்கு 14 நாள் விளக்கமறியல்

திருக்கோவில்  பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன்...

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்