தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை, பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழுவினர் நிராகரித்துள்ளனர்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது திருத்த விவகாரமும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனையை, சிவில் சமூகமென்ற பெயரில் பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழுவில் உள்ள பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் குழுவினர் நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, துண்டுப்பிரசும் அச்சிடுவதிலும் இரு தரப்புக்குமிடையில் உரசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று (23) கிளிநொச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் பொதுவேட்பாளருக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தனர். இந்த துண்டுப்பிரசுரங்களை வடிவமைத்து விட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள கட்டுரையாளர்களின் பார்வைக்கு அனுப்பிய போது, அந்த துண்டு பிரசுரத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழுவிலுள்ள கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பினர் எந்த திருத்தமும் செய்யாமல் அந்த பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தனர்.