தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை: கிளிநொச்சி வைத்தியசாலையில் கண்சிகிச்சைக்கு சென்றவர்கள் குற்றச்சாட்டு!

Date:

தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்களை விசேடமாக அழைத்து சிகிச்சையளிக்கப்படுவதால், தாம் பாதிக்கப்படுவதாக கிராமப்புற மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தனியார் வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட நோயாளர்கள் விசேட வைத்திய நிபுனர்கள் பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு விசேடமாக பார்வையிடும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

நேற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் கண் சிகிச்சைப் பிரிவில் இச்சம்பவம் தொடர்பில் அவதானித்த நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விசேட வைத்திய நிபுனரிடம் காண்பிப்பதற்காக தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்த நோயாளர்கள் இவ்வாறு வரிசை நடைமுறையை பின்பற்றாது அழைக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சைக்காக தூர இடங்களிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற ஏழைகள், போக்குவரத்து உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வெளிநோயாளர் பிரிவில் நீண்ட வரிசையில் நின்ற பின், கண் சிகிச்சை பிரிவிற்கு அனுப்பப்படுகின்றனர். மீண்டும் அங்கு தொடர் இலக்கங்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், குறித்த வரிசை நடைமுறையை பின்பற்றாது, தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்தவர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றனர்.

அவர்களிற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வைத்தியர்கள் பார்வையிடுகின்றனர். சிகிச்சைக்காக சென்ற ஏழை நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், தூர இடங்களிலிருந்து செல்லும் ஏழை நோயாளர்கள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலை கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதனால் அப்பாவி ஏழைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்