பல்டி அணிக்கு தலைமை தாங்கும் தினேஷ் குணவர்தன

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து ரணிலை ஆதரிக்கும் பல்டி அணிக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (16) கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல்டி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய தொண்ணூறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் புதிய அரசியல் கூட்டணி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவை பொதுச் செயலாளராகக் கொண்ட கூட்டணிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்குவார். இதன் ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர்களாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அல்லது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பல்டி அணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கம் வகிப்பார் என தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்