27.8 C
Jaffna
September 15, 2024
இலங்கை

சாணக்கியனுக்கு ரணில் வழங்கிய ரூ.60 கோடி பணம்!

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தேவையென்பதை உணர்ந்துகொண்டே தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார், அது தொடர்பில் உறுதியளிக்கும் ஜனாதிபதி வேட்பாளருடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ)செயலாளா நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும் எமது கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளருடன் பேசுவதற்கு தயாராகயிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்காக 25 இற்கும் மேற்பட்டவர்கள் களமிற்கப்பட்டுள்ளபோதிலும் வடகிழக்கினை மையப்படுத்தி ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்களின் பெயரை தமிழ் தேசிய கட்சிகளும் சிவில் சமூகசெயற்பாட்டாளர்களும் இணைந்து முன்மொழிந்துள்ளனர்.

தமிழ் பொதுவேட்பாளர் தேவை என்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது. கடந்த காலத்தில் இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசாங்கங்களினாலும் தமிழர்களின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரின் தேவை ஏற்பட்டது.

தமிழ் மக்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இன்றும் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடாத்தப்படுகிறார்கள் என்பதையும் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் கட்சிகள் ஒன்றாக செயற்பட்டது போன்று தற்போதும் ஒன்றாக பயணித்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ் பொது வேட்பாளரின் அவசியம் உணர்ந்து அதனை செய்வதற்கு முன்வந்துள்ளோம்.

ஜனாதிபதி தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்கள எங்களுடன் பேசுவதற்கான காலம் உருவாகி உள்ளதாக நான் உணர்கின்றேன். சாணக்கியனுக்கு தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே 60 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்காக கட்சியின் முடிவின்றி இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளவர் பற்றி மக்கள் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

நான் அறிந்த வரையில் கிட்டத்தட்ட சாணக்கியனுக்கு ஜனாதிபதி அவர்கள் 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஏன் இவ்வளவு நிதி சாணக்கியனுக்கு வழங்கியுள்ளார் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைப்பார்கள். அதற்கு மக்களுக்காக பெற்றுள்ளேன் என்பார்.

கட்சிக்கு கூட தெரியாமல் கட்சியின் முடிவை மீறியும் இந்தப் பாரிய தொகையை ரணில் பேசி ஒரு இணக்கப் பாட்டுடன் பெற்றுள்ளார் என்றால், அவர் ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருப்பார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ. வேலை செய்வேன் என்ற உத்தரவாதத்தை வழங்கி இருப்பதனால் தான் ஜனாதிபதி இவ்வளவு பாரிய தொகையை வழங்கியுள்ளார்

ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான நரி தந்திரம் உடையவர். பாராளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு பாவிக்க முடியும் என்றும் நன்கு அறிந்தவர். சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளமை தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இது தனிப்பட்ட ரீதியிலே வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்காக பற்றி மக்கள் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்கள எங்களுடன் பேசுவதற்கான காலம் உருவாகி உள்ளதாக நான் உணர்கின்றேன். எங்களது கோரிக்கைகளை ஏற்று இவர்கள் ஒரு நியாயமான தீர்வை வைத்தால், என்னுடைய நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக இருக்கும். இருப்பின். நியாயமான பேச்சு வார்த்தைகள் இடம்பெறாமல் விட்டால் தமிழ் பொது வேட்பாளரின் பெறுமதி என்பது சரியானது என நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

21,22ஆம் திகதிகளில் மதுபானச்சாலைகள் மூடல்

Pagetamil

பல அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்திய அநுரவின் அறிவிப்பு!

Pagetamil

பொதுவேட்பாளர் மூலம் தமிழர் தலைவிதியை தீர்மானிக்கும் காலம் கனிந்துள்ளதாம்: யாழ் பல்கலைகழக மாணவர்களின் அரசியல் விளக்கம் இது!

Pagetamil

யாழில் ரணிலின் பிரச்சாரக் கூட்டம்

Pagetamil

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Pagetamil

Leave a Comment