ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட வைபவத்தில் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் நியமிக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராகவும் செயற்படுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ, முன்னைய பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் உட்பட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
38 வயதான நாமல் ராஜபக்ச, 2010 பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மவுண்ட் செயின்ட் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான நாமல் ராஜபக்ஷ ஒரு திறமையான ரக்பி வீரர் ஆவார். இலங்கை தேசிய ரக்பி அணியின் தலைவராகவும் இருந்தார்.