Pagetamil
உலகம்

பிரிட்டனில் கலவரத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் நாட்டில் நடக்கும் வன்முறைக் கலவரங்கள் பற்றிக் கலந்துபேச அவசரக் கூட்டம் நடத்தவிருக்கிறார்.

கலவரங்களில் ஈடுபட்ட 150க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிநுழைவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வார இறுதியில் பிரிட்டனின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

ரொதெர்ஹெமில்  அடைக்கலம் நாடுவோர் தங்கியிருந்த Holiday Inn ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்தார்.

பிரிட்டனில் 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

தாக்குதலை நடத்தியவர் முஸ்லிம் குடியேற்றவாசி என்ற பொய்யான தகவலை வலசாரிகள் பரவியுள்ளனர். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை உருவாக்க எண்ணியதாக நம்பப்படுகிறது.

கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் பிரிட்டனில் பிறந்த, கிறிஸ்தவர் எனக் காவல்துறை குறிப்பிட்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுவிக்கப்படவிருந்த 8 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உயிரிழப்பு

east tamil

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

Leave a Comment