யானை தாக்கி ஒருவர் பலி

Date:

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5ஆம் கட்டை கடவான காட்டுப்பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (25) அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றிருந்த வேலை யானை தாக்குதலுக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கே.ஜி நிலந்த இந்துனில் (வயதில்-44) எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்