இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
“76 ஆண்டுகளாக, எங்களை திவாலான நிலைக்குத் தள்ளும் திறமையற்ற அரசியல் குழுவால் நாங்கள் வழிநடத்தப்பட்டுள்ளோம். இலங்கை வளர, நாங்கள் ஊழலை நசுக்க வேண்டும். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக இது எனது முறையான மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்பு” என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொரு இலங்கையர்களையும் தன்னுடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.




