போதை மாத்திரைகளுடன் திருமலையில் சகோதரர்கள் இருவர் கைது

Date:

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை சாரதா புற விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் (வயது-26, வயது – 28) உடைய அண்ணன் தம்பி என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 362 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் இருவரையும் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய உப்புவெளி பொலிசார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ் –

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்