600 கோடி ரூபாவிற்கும் அதிகமான போதை பொருட்கள் நீதவான் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன. 

Date:

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் வனாதவில்லுவ லாக்டோ தோட்டத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2020 ஆம் ஆண்டு இந்த போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டதுடன், அதில் 355 கிலோ 881 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்ததுடன், அது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, கொழும்பில் இருந்து வனத்தவில்லுவ லாக்டோ பிரசேதத்திற்கு விசேட பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டிருந்தது.

இன்னிலையில் அங்கு உயர் மின் உலையில் 19 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின், ஐஸ், கொக்கெய்ன் உள்ளிட்ட 1890 கிலோ பெறுமதியான போதைப்பொருள் அழிக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோரும் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்