வடக்கு சுகாதார துறையில் உறுதிப்படுத்தப்பட்ட ஊழல்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை

Date:

வடக்கு சுகாதார  துறையில் உறுதிப்படுத்தப்பட்ட ஊழல்கள் மீது எவ்வித
நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை

வடக்கு மாகாண சுகாதார துறையில் 2009 இற்கு பின்னர் பல ஊழல் மோசடிகள்
தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு  அவை உறுதிப்படுத்தப்பட்ட
பின்னரும் அவ் ஊழல் மோசடிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படாததன் விளைவே தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள் இடம்பெற காரணமாக
அமைந்துள்ளது பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண சுகாதார துறை மீது நீண்ட காலமாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பலவற்றுக்கு விசாரணைகள்
இடம்பெற்றுள்ளன.

பல ஊழல் மோசடிகளுக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களம்,
தேசிய கணக்காய்வு அலுவலகம் என்பன கணக்காய்வுகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை உறுதி செய்து அறிக்கைகளை சமர்த்திருந்தன. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப புலன்விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றன.

அந்த விசாரணைகளின் போதும் குற்றங்கள் நிருபிக்கப்பட்டு அவர்களுக்கு ஊழல்
மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையும்
தயாரிக்கப்பட்டிருந்தன்.

ஆனால் இவை எவற்றுக்கும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஊழல்
மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் தாங்களாகவே இடமாற்றம் பெற்று வேறுத்
திணைக்களங்களுக்கு சென்றமை பதவி உயர்வு பெற்றுச் சென்றமை என அவர்கள்
அதிலிருந்து தப்பித்துக்கொண்டனர்.

இந்த நிலைமையே சுகாதார துறையில் தொடர்ச்சியாக ஊழல்கள் இடம்பெறுகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனத்
தெரிவிக்கும் பொது மக்கள்.

கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையில்  கொரோனா காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள்
தொடர்பில் மாகாண கணக்காய்வுத் திணைக்களம், தேசிய கணக்காய்வு அலுவலகம்
ஆய்வு செய்து ஊழல்களை நிருபித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் விசாரணை குழுவும்  விசாரணைகளை மேற்கொண்டு ஊழல் மோசடிகளை நிருபித்து அதில் ஈடுப்பட்டவர்களான பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் மீது குற்ற பத்திரிகையும் தயாரிக்கப்பட்டு உரிய மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந் நடவடிக்கைக்கு இன்று வரை  எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பதவி உயர்வு பெற்று சென்று விட்ட நிலையில் கணக்காளர்
முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று
சென்றுவிட்டார். அவ்வாறே ஏனைய ஊழியர்களும் இதிலிருந்து
தப்பித்துக்கொண்டனர்.

இதில் சம்மந்தப்பட்ட கணக்காளர் முல்லைத்தீவு வலயக்
கல்வித் திணைக்களத்திலும் மோசடிகளில் ஈடுப்பட்டதாக அண்மையில்
குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது அவ்வாறே
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதிபரின் ஊழல் மோசடிகள்
தொடர்பிலும் மாகாண மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகங்கள் கணக்காய்வு ஊழல்
மோசடிகளை உறுதிப்படுத்தியிருந்தன.

அந்த அறிக்கைகள் ஊடகங்கள் மற்றும் சமூக
வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இருந்தும் அவர் மீதும் எவ்வித
நடவடிக்கையும் இ்ல்லை தற்போது அவர் ஓய்வுப்பெற்று சென்றுவிட்டார்.

எனவே இவ்வாறு நிரூபிக்கப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள்
எதுவும் எடுக்கப்படாமையின் விளைவே வடக்கு சுகாதார துறை உட்பட எல்லாத்
துறைகளிலும்  தொடர்ச்சியாக   ஊழல் மோசடிகள் இடம்பெற காரணம் என பொது
மக்களால சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்