‘வெளிநாடு செல்வதை பற்றியும் யோசிக்கிறேன்’: சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!

Date:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, 14 நாட்கள் விடுப்பில் செல்வதாக தெரிவித்துள்ளார்.

அவரை இடமாற்றம் செய்ய மருத்துவ மாபியாக்கள் முயல்வதாக தெரிவித்து, தென்மராட்சி மக்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் 5 பேரை மருத்துவமனை தங்கும் விடுதிக்கு அழைத்து பேச்சு நடத்திய போதே இதனை தெரிவித்தார்.

மருத்துவமனை சிக்கலை சுமுகமாக தீர்க்க பொலிசார் தீவிர முயற்சியெடுத்த நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

தன்னை கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகராக மீண்டும் நியமித்தால், மீண்டும் அதை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும், இல்லையெனில் மருத்துவ சேவையிலிருந்து விலகி வெளிநாடு செல்வதை பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...

வங்கி கணக்குகளைத் திறக்க, வாகன வருவாய் உரிமங்களைப் புதுப்பிக்க TIN சான்றிதழ் தேவையில்லை: நிதி அமைச்சு

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN)...

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்