67வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் தொலைபேசி பகுப்பாய்வை பெற உத்தரவு!

Date:

Altair அடுக்குமாடி கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன், மாணவியின் இரண்டு கையடக்க தொலைபேசிகளின் சிம் அட்டைகள் தொடர்பான தொலைபேசி தரவு பதிவேடுகளை கொம்பன்னித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் கோசல சேனாதீர, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொம்பனித்தெரு பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் தம்முடன் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் மாணவர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸார் அங்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மாணவனின் தந்தை இலங்கையில் இராஜதந்திரி எனவும், அவருக்கு இராஜதந்திர சிறப்புரிமை இருப்பதால் வாக்குமூலம் வழங்க நீதிமன்ற உத்தரவுடன் வருமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்படி வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் இருந்தால் அதுபற்றி விசாரித்து உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதவான் கூறினார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவிக்கு உயரமான இடங்களில் ஏறி செல்பி எடுக்கும் ஆசை இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அவ்வாறான பல செல்பிகள் அவரது கைத்தெலைபேசியில் இருந்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்