சாவகச்சேரி வைத்தியசாலை பணிப்பாளர் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாம்

Date:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய வைத்திய அத்தியட்சகர் சிறப்பாக செயற்படுவதாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களும், பிரதேச மக்களும் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு மாறாக புதுக்கதை சொல்லியுள்ளனர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் மாவட்ட சுகதார சேவைகள் பணிப்பாளரும்.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று ஊடகங்களிடம கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக வைத்தியர் R.அச்சுதன் கடந்த மாதம் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

நான் அங்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். அங்குள்ள வைத்தியர்கள் தாதியர்கள் நன்றாக வேலை செய்கின்றனர்.

ஆனால் புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு வந்த பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

அது தொடர்பில் அனைத்து உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன். குறித்த விடயம் தொடர்பான விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன.

இந் நிலையில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் தற்காலிகமாக மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு வைத்தியர் ராஜீவ் அவர்களை நியமித்துள்ளோம்.

இருப்பினும் குறித்த நியமனத்தை வழங்கவிடாது வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுணா இராமநாதன் தொடர்ந்தும் தான் பதவியில் இருக்க வேண்டும் என இருந்து வருகிறார்.

தற்போது அங்கே சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மின்பிறப்பாக்கி ஊடாக வைத்தியசாலைக்கான அவிருத்திக்கு மேற்கொள்வது தொடர்பான விடயங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இவற்றை செய்ய விடாது குறித்த அத்தியட்ச்சகர் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்