இலங்கையில் உள்ள ஆசிரியர்களை தமது நாட்டுக்குள் உள்வாங்க மாலைதீவு விருப்பம் வெளியிட்டுள்ளது.

Date:

மாலைதீவு அதிபர் மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலைதீவிலுள்ள அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பெல்பொலகே ரங்க சுஜீவ குணவர்தன மொஹமட் முய்சுவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளிக்கும் போதே மாலைதீவு அதிபர் அதனை தெரிவித்துள்ளார்.

மேலும்இ இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெற விருப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மொஹமட் முய்ஸு மற்றும் உயர்ஸ்தானிகர் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது மாலைதீவுக்கு தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளித்துஇ கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...

இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் ஒப்பந்தங்களை மீறியதால் 30 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது– கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தங்களது ஒப்பந்தங்கள் மற்றும் பிணைப்பத்திரங்களை மீறியதற்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்