பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு பாடசாலைகளில் காலை வேலையில் ஆசிரியர்கள் இருப்பது அவசியம். எதிர்வரும் காலத்தில் அவ்வாறு இல்லாமல் போனால் ஆசிரியர் சேவையை கட்டாய சேவையாக்க நேரிடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அதிபரிகளும் ஆசிரியர்களும் இவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.
இவ்வாறு செயற்படும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய எதிர்கால சமூகத்தை எப்படி நல்வழிபடுத்த முடியும். நாட்டில் உள்ள எல்லா ஆசிரியர்களும் இவ்வாறு செயற்படவில்லை.
சிலரின் அரசியர் காரணங்களுக்கு உடந்தையாக சிங்கள பாடசாலை ஆசிரியர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். தமிழ் முஸ்லீம் பாடசாலைகள் ஒழுங்காக இயங்குகின்றன என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின எதிர்காலம் மணவர்களே அவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இல்லை எனில் ஆசிரியர் தொழில் கட்டாய தொழில் ஆக்கப்படும் என தெரிவித்துள்ளார்.




